Thursday, November 3, 2011


     MIRRACLE AT A SAIDEVOTIE HOUSE TRINCOMALLE (MY TRINCOMALLE VISIT)


http://www.facebook.com/media/set/?set=a.190433927701357.47453.100002042537066&type=1&l=6af546d47e


ஓம் ஸ்ரீசாயிராம்
பகவானின் சர்வவியாபகத்தன்மையை விளக்குவதற்கும் சுவாமி எம்மை விட்டு செல்லவில்லை அவர் எம் எல்லோரோடும் நண்பனுக்கு நண்பனாகவும்தாய்க்கு தாயகவும் தந்தைக்கு தந்தையாகவும் ஏன் நம் ஆன்மாவுக்கு ஆன்மாவாகவும் சக்லமுமாகவும் பரந்துவியாபித்து தன் தன்மையை நாம் உணரசுவாமி அற்புதங்களை நிகழ்துகிறார்.சுவாமி சொல்கின்றார் அற்புதங்கள் ஓர் நுளைவுசீட்டு போல என்று அவை எம்மை அவர் மீது உள்ள நம்பிக்கையைமேலும் அதிகரித்து எம்மை தொடர்ந்து ஒரே படியில் நிற்காது அதற்கு மேல் உள்ள படிகளுக்கு எறுவதற்கு எம்மை உற்சாகப்படுத்துவதோடு நின்றுவிடாமல் அவரே கைகொடுத்து எம்மை மேலே செல்ல உதவி செய்கின்றார்.
பகவானின் சர்வவியாபகத்தன்மையை விளக்குவதற்கு திருகோணமலையில் ஒரு சாயிஅன்பரின் வீட்டில் நிகழ்ந்த அற்புதம் ஒரு சாலச்சிறந்த ஒன்றாக காணப்படுகின்றது ஏனெனில் சுவாமியின் சமாதிதினம் தொடக்கம் பல்வெறு தெய்வீககாட்சிகளுடனும் தெய்வீக நிகழ்வுகளுடனும் ஆரம்பித்த சுவாமியின் படத்தில் இருந்து விபூதி வெளிப்படல்,சுவாமியின் படத்திற்க்கு போடப்பட்ட மாலையானது பூக்களின் எண்ணிக்கை மாறாது மாலை வளர்ந்து செல்லும் நிகழ்வு,புட்டபர்த்தியில் சுவாமியின் சமாதி தினத்தில் கொண்டு வரப்பட்ட விபூதி தூசு ஆனது தீர்த்தம் ஆக ஓர் குடுவையில் இடப்பட்டது அது இன்று வரைக்கும் நிறத்திலும் மணத்திலும் சுவையிலும் குடுவையில் நீர் மட்டும் இட்டும் மாறாது இருக்கின்றதுஅத்துடன் அங்கு சாயி அன்பர்களால் கொண்டு செல்லப்பட்டு வைக்கபடும் படங்களில் இருந்தும் விபூதி வெளிப்பட தொடங்கி தொடர்ந்தும் வந்து கொண்டே இருக்கின்றது.
எனவே சுவாமி எம்மை விட்டு செல்லவில்லை அவர் எம் எல்லோரோடும் நண்பனுக்கு நண்பனாகவும்தாய்க்கு தாயாகவும் தந்தைக்கு தந்தையாகவும் ஏன் நம் ஆன்மாவுக்கு ஆன்மாவாகவும் சக்லமுமாகவும் பரந்துவியாபித்து நம்மோடு இருக்கின்றார் என நம்புவோம்.
“நம்பினோர் கைவிடப்படுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு” எனவே நம்பிகையுடன் ஆவரது அருளமுதத்தில் அவரால் சொல்லப்பட்டுள்ளபடி வாழ்ந்து வையத்தில் வாழ்வாங்கு வாழ்வோமாக.

குறிப்பு : இதனை பகிர்தலின் மூலம் சாயி செய்தியை பரப்புவோம்


”சமஷ்த்த லோகா சுகினோ பவந்து”

ஜெய்சாயிராம்

1 comment: